தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்

Author : Bharath N

Updated : 29/Jan/24

பொங்கல் பண்டிகைனு சொன்னா நமக்கு என்ன நியாபகம் வரும்?

அஞ்சு நாள் லீவ் கிடைக்கும், சொந்த ஊர்க்கு போகலாம், புது டிரஸ் வாங்கலாம், நிறைய பலகாரம் சாப்பிடலாம், ஊர் சுத்தி பாக்கலாம். இப்படி தான நம்மள்ல பலப்பேர்க்கு பொங்கல் இருந்திருக்கு. ஆனா ஒரு விவசாயினோட வாழ்க்கைல பொங்கல் எந்த அளவுக்கு முக்கியமானதா இருக்கும்னு தெரிஞ்சுக்கலாமா.

இயற்கையோட இணைஞ்சு இருக்குறது தான் தமிழரோட வாழ்க்கைமுறையா இருந்திருக்கு. இயற்க்கைக்கு தன்னோட நன்றி செலுத்துவது தமிழரோட மரபு. உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் தமிழ் மக்கள் தன்னோட உழைப்புக்கு உறுதுணையா இருக்க இயற்கை தெய்வமான சூரியனுக்கும், காலம் முழுக்க தன்னோட சேர்ந்து உழைக்குற கால்நடைகளுக்கும் தன்னோட நன்றிய செலுத்தவும், மகிழ்ச்சிய பகிர்ந்துக்கவும் கொண்டாட்றது தான் பொங்கல் பண்டிகை.இதை தை திருநாள்,அறுவடை திருநாள்னும் சொல்வாங்க.

தமிழ்நாட்ல மட்டும் இல்லாம ஆந்திரா, கர்நாடகா, அசாம், பஞ்சாப் போன்ற இந்தியாவோட பல மாநில மக்கள் பொங்கல் பண்டிகைய கொண்டாடுறாங்க. அயல்நாட்ல இருக்க இந்திய மக்களும் பொங்கல் பண்டிகைய தவறாம கொண்டாடுறாங்க.

கால்நடைக்கும், விவசாயிக்குமான உறவு:

விவசாயினோட உற்ற நண்பனாகவும், அவங்க குடும்பத்துல ஒரு நபராகவும் தான் கால்நடைகள் இருக்கு. அவர்களோட அன்றாட வாழ்க்கைல குறிப்பா விவசாயத்துக்கு உறுதுணையா இருக்க காளை மாட்டுக்கும், தினசரி பொருளாதாரத்துக்கு ஆதாரமா இருக்க பசுவுக்கும் தன்னோட நன்றிய தெரிவிக்கும் நாளாக இருப்பது தான் தை 2ஆம் நாள் மாட்டு பொங்கல்.

மாட்டு பொங்கலுக்கு மாடுகள சுத்தம் செஞ்சு, கொம்புகள சீவி, வண்ணம் பூசி,அலங்காரம் செஞ்சு பொங்கல் வச்சு மாடுகளுக்கு பொங்கலை படச்சு தன்னோட மகிழ்ச்சியை பகிர்த்துப்பாங்க.

பொழுது சாஞ்சதும், காளை மாடுகளை வண்டில பூட்டி, குழந்தைகளை அதுல ஏத்திக்கிட்டு ஊர் சுத்தி வரதும் ஒரு வழக்கமா இருந்துச்சு. இன்னிக்கு பல வழக்கங்கள் மாறினாலும் விவசாயி மாட்டு பொங்கலுக்கு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வழக்கம் மாறாம இருக்கு.

உழவர்பூமிக்கும் விவசாயிக்குமான உறவு:

விவசாயிகள் விவசாயத்தில் தான் விளைவிக்கிற பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காம ரொம்பவும் சிரம பட்றாங்க.விவசாயி தன்னோட தினசரி பொருளாதாரத் தேவைக்காக பசும்பாலை விற்று வாழ்க்கையை நடத்துறாங்க.அதுலயும் இடைத்தரகர் மூலம் சரியான விலை கிடைக்காமல் கஷ்டபட்றாங்க . "உழவர்பூமி" விவசாயிகளிடம் இருந்து விலை மாற்றமின்றி பாலை பெற்றும் மற்றொரு பக்கம் கலப்படமில்லாத பசும் பால் நகர்ப்புற மக்களுக்கு கொண்டு சேர்க்கிற நோக்கத்தோடும், இந்நிறுவனத்தை துவங்கி ஆறு ஆண்டுகளை கடந்து வந்திருக்கோம்.

காய்கறி பழங்கள் கொள்முதல் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏத்தமாதிரி விற்பனை விலையும் நாளுக்கு நாள் மாறிக்கிட்டே இருக்கும்.பாலினுடைய விற்பனை விலை ஒரே மாதிரி இருந்தாலும் அதனோட கொள்முதல் விலை நாள்தோறும்/பருவநிலை பொறுத்து மாறிக்கிட்டே தான் இருக்கும். விவசாயிகள் பலரும் தன்னுடைய பாலுக்கு உரிய விலை மற்றும் உடனடியா பணம் கிடைக்கனும்னு விரும்புறாங்க.

உழவர்பூமி நிறுவனம் எந்த இடைத்தரகரும் இல்லாம நேரடி பால் கொள்முதல் நிலையம் மூலமா பால் கொள்முதல் செஞ்சு அவங்களுக்கு பத்து நாளுக்கு ஒரு முறை அவங்களோட வங்கி கணக்குல நேரடியா பணம் செலுத்த ஆரம்பிச்சோம்.

10 விவசாயிகளோட ஒரு கிராமத்துல தொடங்கி, இன்றைக்கு 18 கொள்முதல் நிலையத்துல, 1372கும் மேற்பட்ட விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியா பால் கொள்முதல் செஞ்சுட்டுஇருக்கோம்.

இதன்மூலமா விவசாயிகள் தன் பொருட்களுக்கு உரியவிலை பெற்று தன் அன்றாட வாழ்வை மகிழ்ச்சியா நடத்துறதுல ஒரு முக்கிய பங்களிப்பை வகிப்பதில் உழவர்பூமி நிறுவனம் பெருமை கொள்கிறது.

உழவர்பூமிக்கு சுத்தமான, தரமான பாலை வழங்கும் அனைத்து விவசாயிகளுக்கும், உழவர்பூமி பாலை விரும்பி பருகும் வாடிக்கையாளர்களுக்கும் இனிய தை பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

#உழவர்பூமி#பொங்கல் #விவசாயம்


Simple, Safe & Quick INSTALL APP